Skip to content

April 24, 2009

Ayan

அயன், இது என்னடா புது பெயரா இருக்கேனு நினைக்கிறீங்களா?. நானும் நினைச்சேன், ஆனா, அயன் ஒன்னும் புது பெயர் இல்ல. போன வாரம் வெள்ளித்திரைங்கிற மலையாள வார இதழ், ஒவ்வொரு எழுத்தா கூட்டி படிச்ச பொது தான் தெரிஞ்சது, அயன் என்பது முருகன் நொட ஆயிரக்கனக்கான பெயர்ல் ஒன்னுனு. சரி இது ஒரு புறம் இருக்க, நெட்ல “அயன் மீனிங்க்” அப்படினு  செர்ச் தட்னா, ஒரு வலைல பிரம்மா,  இன்னொரு வலைல நாராயன் (நார் + அயன்).. இதுல எத நம்புறதுனு தெரியல. விட்டா, த தமிழ்நாடு ஃபேமஸ் “அய்யனார்” ரொட ஷார்ட் ஃபார்ம் தான் அயன் சொல்லுவாங்க பொல…

சரி,படத்துக்கு வருவோம்.  தேவா, ஒரு எம்சிஏ கோல்ட் மெடலிசஸ்ட். படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி, ஒரு Iடி வேலை பார்க்கலாம்.

Ayan

Ayan

ஆனா, அவன் அறிவுக்கு கடத்தல் தொழில்லதான், தான் சிறந்த வழிகாட்டிய வரமுடியும்ங்கிற நம்பிக்கையில, அவனொட மாமா பன்ற கடத்தல் தொழில்ல ஜாயின் பண்ணி, தன்னொட அறிவால பல கடத்தல்கல சூப்பரா, செஞ்சு முடிக்கிறார், படத்தின் கதா நாயகன் சூர்யா.

வில்லனும் கடத்தல் காரன் தான், ஆனா வில்லன் தாஸ் ரொம்ப கெட்டவன், சூர்யாவோட கொஞ்சம் அறிவு கம்மி, அவ்வளவா சிரிக்க மாட்டார், காதலிக்க மாட்டார், அளவுக்கு அதிகமா கோபப்டுவார். இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னன்னா, வில்லன் ட்ரக்ஸ், அதாவது, போதைபொருள் கடத்துவான், பட் ஹீரொ நல்லவரு, செய்ற தொழில் தப்புனாலும், அதுலயும் ஒரு நியாயம் தர்மம் பார்க்கிறவர். இப்படி இவங்க ரெண்டு பேருக்குல்ல நடக்கிற சண்டைய, தந்திரம் மற்றும் சாதுர்யமான திருப்பங்களாலும், கடத்தல் என்கிற கதைக்களத்தைக் கொண்டு படத்த பிரம்மிப்பூட்டுர மாதிரி வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கே வீ ஆனந்த். இந்த படத்த பத்தி சொல்லனும்னா சொல்லிக்கிட்டே இருக்கலாம். மொத்ததுல ஒரு புதுமையான தமிழ் படம் பார்த்த எக்ஸ்பீரியன்ஸ், இந்த படத்துல இருந்தாலும், இந்த படத்த எல்லாம் ரெவியு பண்றது வெட்டி வேலைனு தான் எனக்கு  தோனுது. ஸொ, இத்தோட விட்டுறேன். நீங்களும் படத்த பாருங்க! ஜஸ்ட் என்ஜாய் பண்ணுங்க!

Read more from Movies

Comments are closed.