Aayirathil Oruvan
When I think of fantasy, the first story that would come to my mind is Ramayana. The story is simple, adventurous, has its own thrill. From the beginning to end, the fantasy is at its best. This widely known story would be a shit, if one takes vulgarized stand on Putra thosha Yaagam, Aswametha Yaagam, Linga Puja etc. Exactly, That’s what happens to Aayirathil Oruvan, Magnificient fantasy plot, spoiled by Off color Scenes. Moreover, the movie does not give you the feel that is expected out of such a nice storyline.
It is quite surprising to see the director’s comment that he would quit the movies for good if the movie is proved a copy of a hollywood movie. Frankly, its not a copy of one hollywood movie, but several scenes are ripped off from various hollywood movies.
When the second half of the movie begins, there’s whole lot of confusion. I could not control laughter, when it was revealed that pandyas want to take revenge on chola after 800 years, in spite of the fact that, Pandyas themselves has lost their country 700 years back. From Stone Henge to Colosseum, Chola Kingdom has all wonders of the world, Wow, director’s imagination is at its best, thats real fantasy(?). It is evident that director has lost focus, wants to break the stereotypes but ends up with a mega serial.
Aayirathil Oruvan, Nice Attempt, Better Luck Next Time. Selva has to improve his directorial skills, Stay in Focus.
Though the Aayirathil Oruvan story has been taken as a fantasy, this story can also be made as a real life story. For instance, Spanish has raided the complete inca empire in 16th century, without leaving a single building that depicts their culture. But only on the early 20th century, the Macha Pichu, A uninhabited human settlement in green mountain, came to the light of the world, and i.e, the last remnants of Inca Empire.
Ice Age 3D: Dawn of the Dinosaurs
Its a wonderful experience watching the third installment of Ice Age: Dawn Of the Dinosaurs. The brilliance of this third movie, is its 3D. Generally, a 3D Movies, would have lots of 3D gimmicks and very tiny story line which is hard to find. Ice Age 3 falls under different category, as it has got nice story which is brilliantly played on screen. This movie has got loads of humor, on par to its predecessors. I would recommend Ice Age 3 as a must see movie for anyone who wants to have fun.
Ever since I watched Jurassic Park, I always thought that dinosaur is a fiery weird villainous creature. But for the first time, these creatures has got a comedy role to play, which works out very well in the movie. I give Double ratings.
After watching this movie in 3D, I have been looking for various 3D photos online. I want to buy 3D glasses in Chennai. Can somebody help me? Where can I buy 3D glasses in Chennai?
இகோமுசி
சில மாதங்களுக்கு முன்பு, லயன் காமிக்ஸ் வெளி வந்த டெக்ஸ் வில்லரின் அசத்த வைக்கும் 3 பாக சாகஸத்தின் கதைச்சுருக்கும் பின் வருமாரு..
“நவஜோக்களுக்கும் வெள்ளையர்களுக்குமிடையே சமத்துவத்தை நிலைநாட்ட விரும்புகிறார், இரவு கழுகார். ஆனால், மேஜர் வெல்மேன், யானோடோ எனும் நவஜோ மந்திரவாதி மூலம், சீறும் கரடி்யை, வெள்ளையருக்கு எதிராக கலகம் செய்ய தூண்டுகிறார். அதன் மூலம், நவஜோக்கள் அனைவரையும் அழித்துவிட்டு, நவஜொக்களின் பொக்கிசத்தை அடைய நினைக்கிறார், மேஜர் வெல்மேன். ஆனால், இரவுக் கழுகார், தனது சமயொஜித அறிவினாலும், வீரத்தினாலும், மேஜரின் திட்டத்தை தவிடுபொடியாக்கி், நவஜோக்களுக்கும் வெள்ளையர்களுக்குமிடையே அமைதியை நிலைநாட்டுகிறார் “.
கேள பாய் கதைகளில், தரப்படும் அடைமொழிகள் சுவாரசியாமானது. எடுத்துகாட்டுக்கு, மேலே கண்ட கதைச்சுருக்கத்தில், டெக்ஸ் வில்லரின் அடைமொழி இரவு கழுகார் என்றும், நவஜோ தலைவனை “சீறும் கரடி்” என்றும் குறிப்பிடுகையில் அந்த பாத்திரத்தின் கதைச்சுவை கூடுகிறது.
இரவு கழுகார், சீறும் கரடி் வரிசையில், தமிழகம் வருகிறான் “முரட்டு சிங்கம்”. யார் இந்த முரட்டு சிங்கம் என்று அதிகம் சிந்திக்க வேண்டாம். “இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி” மற்றும், “அறை எண் 305ல் கடவுள்” படத்தை இயக்கிய சிம்புதேவனின் அடுத்த படைப்பு தான் “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்”, சுருக்கமாக “இகோமுசி”. இதில், முரட்டு சிங்கமாக லாரன்ஸ் தோன்றுகிறார். மேலும், ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படம், சுமார் 35 வருடங்களுக்கு பிறகு வெளிவரும் முழு நீள கேள பாய் தமிழ் திரைப்படம்.
என்ன. இப்பவே டிவிடி வாங்க கிளம்பிட்டீங்களா.. Wait.. The Shooting has just began.
Ayan
அயன், இது என்னடா புது பெயரா இருக்கேனு நினைக்கிறீங்களா?. நானும் நினைச்சேன், ஆனா, அயன் ஒன்னும் புது பெயர் இல்ல. போன வாரம் வெள்ளித்திரைங்கிற மலையாள வார இதழ், ஒவ்வொரு எழுத்தா கூட்டி படிச்ச பொது தான் தெரிஞ்சது, அயன் என்பது முருகன் நொட ஆயிரக்கனக்கான பெயர்ல் ஒன்னுனு. சரி இது ஒரு புறம் இருக்க, நெட்ல “அயன் மீனிங்க்” அப்படினு செர்ச் தட்னா, ஒரு வலைல பிரம்மா, இன்னொரு வலைல நாராயன் (நார் + அயன்).. இதுல எத நம்புறதுனு தெரியல. விட்டா, த தமிழ்நாடு ஃபேமஸ் “அய்யனார்” ரொட ஷார்ட் ஃபார்ம் தான் அயன் சொல்லுவாங்க பொல…
சரி,படத்துக்கு வருவோம். தேவா, ஒரு எம்சிஏ கோல்ட் மெடலிசஸ்ட். படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி, ஒரு Iடி வேலை பார்க்கலாம்.
ஆனா, அவன் அறிவுக்கு கடத்தல் தொழில்லதான், தான் சிறந்த வழிகாட்டிய வரமுடியும்ங்கிற நம்பிக்கையில, அவனொட மாமா பன்ற கடத்தல் தொழில்ல ஜாயின் பண்ணி, தன்னொட அறிவால பல கடத்தல்கல சூப்பரா, செஞ்சு முடிக்கிறார், படத்தின் கதா நாயகன் சூர்யா.
வில்லனும் கடத்தல் காரன் தான், ஆனா வில்லன் தாஸ் ரொம்ப கெட்டவன், சூர்யாவோட கொஞ்சம் அறிவு கம்மி, அவ்வளவா சிரிக்க மாட்டார், காதலிக்க மாட்டார், அளவுக்கு அதிகமா கோபப்டுவார். இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னன்னா, வில்லன் ட்ரக்ஸ், அதாவது, போதைபொருள் கடத்துவான், பட் ஹீரொ நல்லவரு, செய்ற தொழில் தப்புனாலும், அதுலயும் ஒரு நியாயம் தர்மம் பார்க்கிறவர். இப்படி இவங்க ரெண்டு பேருக்குல்ல நடக்கிற சண்டைய, தந்திரம் மற்றும் சாதுர்யமான திருப்பங்களாலும், கடத்தல் என்கிற கதைக்களத்தைக் கொண்டு படத்த பிரம்மிப்பூட்டுர மாதிரி வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கே வீ ஆனந்த். இந்த படத்த பத்தி சொல்லனும்னா சொல்லிக்கிட்டே இருக்கலாம். மொத்ததுல ஒரு புதுமையான தமிழ் படம் பார்த்த எக்ஸ்பீரியன்ஸ், இந்த படத்துல இருந்தாலும், இந்த படத்த எல்லாம் ரெவியு பண்றது வெட்டி வேலைனு தான் எனக்கு தோனுது. ஸொ, இத்தோட விட்டுறேன். நீங்களும் படத்த பாருங்க! ஜஸ்ட் என்ஜாய் பண்ணுங்க!
Elephant 1000 (எ) வாரணம் ஆயிரம்
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால், LKG தமிழ் வகுப்பறையில், ‘அ’ னா ‘ஆ’ வன்னா பாடம் நடந்து கொண்டிருந்தது. அ for அம்மா… ஆ for ஆப்பிள்… இ for இங்கிலிஷ் என்று ஒவ்வொரு வார்த்தையாக கற்ற ஞாபகம். அன்று, அருகில் இருந்த நண்பன் “A for என்ன?” என்று கேட்க, அதற்கு “எலிஃபன்ட்” என்று சொல்லி சிரித்தது, இன்றும் சிரிக்க வைக்கிறது. அதே, எலிஃபன்ட்ஐ, தமிழில் “வாரணம்” என்றும் அழைக்கலாம் என்று, என்னைப் போல் தமிழ் அறியாத பலருக்கும், பாடம் புகட்டிய “வாரணம் ஆயிரம்” படத்திற்கு, எனது வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.
“வாரணம் ஆயிரம்” திரைப்படத்தைப் பற்றி மூன்று சொற்களில் சொல்ல வேண்டுமென்றால், சூர்யா..சூர்யா..சூர்யா.. என்று தான் சொல்ல வேண்டும். ஆம். படத்தின் நாயகன், சூர்யா, தந்தை மகன் என்ற இரட்டை வேடங்களில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், விடாமுயற்சி, கடின உழைப்பு, என்ற வார்த்தைகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கியுள்ளார். தந்தை மகன் பாசம், மகனுக்கு தோழனாய் இருக்கும் தந்தை, தந்தையை போல் வாழ நினைக்கும் மகன், இப்படி தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவின் பல பரிணாமங்களை அற்புதமாக செதுக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். மேலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசை, படத்திற்கு மெருகேற்றியுள்ளது. சமீரா, சிம்ரன், திவ்யா என்று மூன்று கதாநயகிகளும், கதையோடு ஒன்றி நடித்துள்ளனர். oklahoma குண்டு வெடிப்பு சம்பவம், படத்தில் சிறிது நேரமே வந்து போனாலும், நிகழ் காலத்தோடு ஒன்றுவதால், தசாவதாரம் சுனாமி போல், படத்தின் கதை அறிவுப் பெட்டகமாகவும் திகழ்கிறது.
இப்படி, பல விசயங்கள், படத்திற்கு பக்க பலமாக அமைந்திருந்தாலும், முடிவில்லாமல் தொடர்ந்து செல்லும் கதை, கௌதம் படங்களில் இயல்பாக காணப்படும் மேற்கத்திய சாயல், ஒரே பாடலில் பணக்காரன் ஆகும் கதாநாயகன், என்று சில பல காரணங்கள், படத்தின் ஈர்ப்பு விசையை குறைக்கிறது. இதில் குறிப்பாக, படத்தின் மேற்கத்திய சாயலை பார்க்கும் பொழுது, படத்திற்கு “வாரணம் ஆயிரம்”என்பதை விட “Elephants 1000″ என்ற தலைப்பு மிகவும் பொறுத்தமாக இருக்கும், என்பது என்னுடைய கருத்து.



![Reblog this post [with Zemanta]](http://img.zemanta.com/reblog_e.png?x-id=53dc3fc4-30f5-4778-8d3f-1d41a2671c1f)

