Skip to content

Posts tagged ‘Tamil’

27
May

இகோமுசி

சில மாதங்களுக்கு முன்பு, லயன் காமிக்ஸ் வெளி வந்த டெக்ஸ் வில்லரின் அசத்த வைக்கும் 3 பாக சாகஸத்தின் கதைச்சுருக்கும் பின் வருமாரு..

“நவஜோக்களுக்கும் வெள்ளையர்களுக்குமிடையே சமத்துவத்தை நிலைநாட்ட விரும்புகிறார், இரவு கழுகார். ஆனால், மேஜர் வெல்மேன், யானோடோ எனும் நவஜோ மந்திரவாதி மூலம்,  சீறும் கரடி்யை,  வெள்ளையருக்கு எதிராக கலகம் செய்ய தூண்டுகிறார். அதன் மூலம், நவஜோக்கள் அனைவரையும் அழித்துவிட்டு, நவஜொக்களின் பொக்கிசத்தை அடைய நினைக்கிறார், மேஜர் வெல்மேன். ஆனால், இரவுக் கழுகார், தனது சமயொஜித அறிவினாலும், வீரத்தினாலும், மேஜரின் திட்டத்தை தவிடுபொடியாக்கி், நவஜோக்களுக்கும் வெள்ளையர்களுக்குமிடையே அமைதியை நிலைநாட்டுகிறார் “.

கேள பாய் கதைகளில், தரப்படும் அடைமொழிகள் சுவாரசியாமானது. எடுத்துகாட்டுக்கு, மேலே கண்ட கதைச்சுருக்கத்தில், டெக்ஸ் வில்லரின் அடைமொழி இரவு கழுகார் என்றும், நவஜோ தலைவனை  “சீறும் கரடி்” என்றும் குறிப்பிடுகையில் அந்த பாத்திரத்தின் கதைச்சுவை கூடுகிறது.

இரவு கழுகார், சீறும் கரடி் வரிசையில், தமிழகம் வருகிறான் “முரட்டு சிங்கம்”. யார் இந்த முரட்டு சிங்கம் என்று அதிகம் சிந்திக்க வேண்டாம். “இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி” மற்றும், “அறை எண் 305ல் கடவுள்” படத்தை இயக்கிய சிம்புதேவனின் அடுத்த படைப்பு தான் “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்”, சுருக்கமாக “இகோமுசி”. இதில், முரட்டு சிங்கமாக லாரன்ஸ் தோன்றுகிறார். மேலும், ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படம், சுமார் 35 வருடங்களுக்கு பிறகு வெளிவரும் முழு நீள கேள பாய் தமிழ் திரைப்படம்.

என்ன. இப்பவே டிவிடி வாங்க கிளம்பிட்டீங்களா.. Wait.. The Shooting has just began.

Irumbu Kottai Murattu Singam

Irumbu Kottai Murattu Singam

3
Jan

Elephant 1000 (எ) வாரணம் ஆயிரம்

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால், LKG தமிழ் வகுப்பறையில், ‘அ’ னா ‘ஆ’ வன்னா பாடம் நடந்து கொண்டிருந்தது. அ for அம்மா… ஆ for ஆப்பிள்… இ for இங்கிலிஷ் என்று ஒவ்வொரு வார்த்தையாக கற்ற ஞாபகம். அன்று, அருகில் இருந்த நண்பன் “A for என்ன?” என்று கேட்க, அதற்கு “எலிஃபன்ட்” என்று சொல்லி சிரித்தது, இன்றும் சிரிக்க வைக்கிறது. அதே, எலிஃபன்ட்ஐ, தமிழில் “வாரணம்” என்றும் அழைக்கலாம் என்று, என்னைப் போல் தமிழ் அறியாத பலருக்கும், பாடம் புகட்டிய “வாரணம் ஆயிரம்” படத்திற்கு, எனது வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.

“வாரணம் ஆயிரம்” திரைப்படத்தைப் பற்றி மூன்று சொற்களில் சொல்ல வேண்டுமென்றால், சூர்யா..சூர்யா..சூர்யா.. என்று தான் சொல்ல வேண்டும். ஆம். படத்தின் நாயகன், சூர்யா, தந்தை மகன் என்ற இரட்டை வேடங்களில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், விடாமுயற்சி, கடின உழைப்பு, என்ற வார்த்தைகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கியுள்ளார். தந்தை மகன் பாசம், மகனுக்கு தோழனாய் இருக்கும் தந்தை, தந்தையை போல் வாழ நினைக்கும் மகன், இப்படி தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவின் பல பரிணாமங்களை அற்புதமாக செதுக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். மேலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசை, படத்திற்கு மெருகேற்றியுள்ளது. சமீரா, சிம்ரன், திவ்யா என்று மூன்று கதாநயகிகளும், கதையோடு ஒன்றி நடித்துள்ளனர். oklahoma குண்டு வெடிப்பு சம்பவம், படத்தில் சிறிது நேரமே வந்து போனாலும், நிகழ் காலத்தோடு ஒன்றுவதால், தசாவதாரம் சுனாமி போல், படத்தின் கதை அறிவுப் பெட்டகமாகவும் திகழ்கிறது.

இப்படி, பல விசயங்கள், படத்திற்கு பக்க பலமாக அமைந்திருந்தாலும், முடிவில்லாமல் தொடர்ந்து செல்லும் கதை, கௌதம் படங்களில் இயல்பாக காணப்படும் மேற்கத்திய சாயல், ஒரே பாடலில் பணக்காரன் ஆகும் கதாநாயகன், என்று சில பல காரணங்கள், படத்தின் ஈர்ப்பு விசையை குறைக்கிறது. இதில் குறிப்பாக, படத்தின் மேற்கத்திய சாயலை பார்க்கும் பொழுது, படத்திற்கு “வாரணம் ஆயிரம்”என்பதை விட “Elephants 1000″ என்ற தலைப்பு மிகவும் பொறுத்தமாக இருக்கும், என்பது என்னுடைய கருத்து.

IMDb | WiKi

12
Oct

சோதனை பதிப்பு

கடந்த இரண்டு நாட்களாக, நான் எழுதிய பதிப்பு, பதிவு செய்யும் தறுவாயில், மென்பொருள் மற்றும் இணைய முகவரி அமைப்பு மாற்றம் காரணமாக, பதிப்பு காணாமல் போனது.

இந்த பிரச்சனை இன்று தன்னிச்சையாக சரியாக இருக்கும் என்கின்ற எனது நம்பிக்கையை சொதிப்பதற்க்காக இந்த சோதனை பதிப்பு.

மீண்டும் சந்திக்கும் வரை, தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்து, உங்களிடம் இருந்து விடைபெறுகிறென்.

நன்றி. வணக்கம்.

30
Sep

Lost Name

When ever filling an online form or an application, I used to stuck at last/sur name . Is it Pandian(my third name) or Annamalai(My Father’s Name)? . After a moment of doubt, I would write one of the two and click submit. After all, its my name.

But the question of last name was always a doubt. Finally, today, i searched for last name in wikipedia. Its a very big explanation. I keep on reading and reading, reading for a while.

Obviously, Last Name is used as additional identifier for a person. In various part of the world, the last name is used for different purpose. In Tamil Nadu & kerala, Nowadays, Father’s Name was used as last name while some hundred years back, caste or clan or place name were served as second name. Credit goes to Periyar. but all in vain.

It was happened to me to watch periyar movie, last week. As per school knowledge, I remember Periyar as a freedom fighter. But after watching the movie, I realised that he was more or completely devoted himself to fight against untouchability and casteism and he rarely spent time for fighting against Independence. He also called for a new country called dravida nadu (dravidstan) during 1938 – 1947 but it was not happened during Independence.

From this movie, I came to understand even at those time, everyone has acted with the political motto than thinking for the beneficial of the whole country.

Anyway, A must watch movie for Tamils (Also Malayali).